வந்தாறுமூலை பெண் கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 2007 ம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன்  இன்று வியாழக்கிழமை (01) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் உள்ள பேக்கரிக்குள் கடந்த 2007 டிசம்பர் 25 ம் திகதி செங்கலடியைச் சேர்ந்த பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் அத்துமீறி உட்புகுந்து தனிமையில் இருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியான நாகமுத்து பிறேமாவதி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்கு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மட்டு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக  மன்றில் இனங்காணப்பட்டு முதலாவது குற்றமான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் பேக்கரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றத்திற்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும், இரண்டாவது குற்றமான அவரது மனைவியான நாகமுத்து பிறேமாவதியை கொலை செய்த குற்றத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன்  இன்று வியாழக்கிழமை (01) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *