சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நாளை(17) உலக உயர்குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணியும் உணவுக் கண்காட்சியும் கருத்தரங்கும் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது பிராந்திய தொற்றா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில், “உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவீட்டு, அதனைக் கட்டுப்படுத்தி, நீண்ட நாட்கள் உயிர் வாழுங்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
குறித்த நடைபவணி நிகழ்வு நாளை காலை 08.00 மணி முதல் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை இருந்து ஆரம்பித்து பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து, மீண்டும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையைச் சென்றடையும்.
அத்துடன் உயர் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய உணவுக் கண்காட்சி மற்றும் அது பற்றிய கருத்தரங்கும் இதன்போது இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

