கொஸ்லந்தையிலுள்ள வனப்பகுதியொன்றில் சட்டவிரோதமான முறையில், வளர்க்கப்பட்ட கஞ்சா சேனையொன்று நேற்று(16) பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில், கொஸ்லந்த மஹாலந்த கிராம அலுவலர் பிரிவில் உள்ள அளுத்வெல ஹமுதுரு வனப்பகுதியில், ஒரு ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட கஞ்சா சேனையே, இவ்வாறு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா சேனையில் வளர்ந்திருந்த, சுமார் 6 அடி உயரமுள்ள 50,420 கஞ்சா செடிகளும், அரை ஏக்கரில் வளர்க்கப்பட்ட 04 அடி உயரமுள்ள 26,995 கஞ்சா செடிகளும், கொஸ்லந்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஜனித்த குமார தலைமையில், பறிமுதல் செய்யப்பட்டு, எரிக்கப்பட்டன.
இந்நிலையில், இச்சேனையின் உரிமையாளர்கள் குறித்து, இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


