ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு தேசிய விருது!

இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் நேற்று (05) நடைபெற்ற சமூகப் பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் விழாவில், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முதன்முறையாக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்ப்பு மற்றும் தவணைப் பணச் சேகரிப்பில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றதுடன், தேசிய இலக்குகளையும் சிறப்பாக அடைந்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தேசிய விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், இச்சாதனைக்குப் பங்களிப்பு வழங்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண சமூகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.T. சுதாகாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் தவிசாளர் M.K.B. திசாநாயக்க உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *