தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் மறக்குமா மே-18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(17) வாகரை பால்சேனையில் பிரதான வீதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொதுச் சுடரை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இன,மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள்.
வருடா வருடம் தாயகச் செயலணியினரால் இவ் நினைவேந்தல் நிகழ்வு நினைவு கூறப்படுவது வழக்கமாகும்.
இன்று கொட்டும் மழை என்றும் பாராமல் இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
சிவில் செயற்பாட்டாளர் செல்வகுமார் தமது சிவில் சமூக பணியை முன்னெடுத்து வருவதை பொறுக்கமுடியாத இனம் தெரியாத நபர்கள் அவரை ஒழிந்திருந்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டமையை கண்டிப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.


