மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று(19) 1008 மஹா சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது மக்கள் பால்குடத்தை தலையில் ஏந்தியவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.
அதன் பின்னர் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து சகஸ்ரநாம 1008 , 108 சங்காபிஷேக நிகழ்வுகளும் இடம்பெற்றன.