மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 18 திகதி வரை 1264 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் ஓட்டமாவடி, மட்டுநகர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேசங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மே மாதம் 18 ஆம் திகதி வரை 161 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், மட்டு நகர், களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களில் விசேட டெங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள சூழலை அகற்றி வருகின்றனர்.
மாவட்டத்தில் டெங்கு நோயினால் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளது.
மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் பொருட்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழழை வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.