மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல்

கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் இன்று(19) பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே. ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட  மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் தங்களது காத்திரமான கருத்துக்களையும் இதன் போது வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *