சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டித் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (27) வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்த சர்வதேச போட்டி 30ஆம்  திகதி வரை நடைபெறும் இதில் ஆண்கள், பெண்கள், ஒற்றையர்,  இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

20 நாடுகளை சேர்ந்த 192 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் சரத் கமல், சத்யன், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா உள்ளிட்ட 30 இந்திய வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான சென்னையை சேர்ந்த 42 வயதான சரத் கமல் இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *