மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக 210 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏப்ரல் 29 ஆம் திகதி வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 210 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிமீறல் அடிப்படையில் சாதாரணதரமுடையவை எனவும், அநேகமான முறைப்பாடுகள் இதுவரை முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *