வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் பிரிவில் இன்று(05) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் கதிர் இயக்கவியல் பொருட்கள் சில தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

காலைவேளை குறித்த பிரிவில் இருந்து புகை வருவதை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வைத்திய அத்தியட்சகருக்கு தகவல் வழங்கியமையடுத்து அவர் மட்டக்களப்பு தீயணைப்பு பிரிவினர், மின்சாரசபை மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மின் ஒழுக்கினால் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலத்திரனியல் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளன. ஏற்பட்ட சேதத்தினை நிவர்த்தி செய்ய தற்காலிகமாக ஏறாவூர் மற்றும் காத்தான்குடி வைத்தியசாலைகளில் படங்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *