ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
டித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் நேற்று(10) மாலை பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்தார்.

