கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது.
இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்.
ஆலயங்களில் வழிபட்ட பின்னர் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பரீட்சை நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைந்ததை காணமுடிந்தது.