9 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மாவட்ட மட்ட கரம் விளையாட்டுப்போட்டிகள்

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மாவட்ட மட்ட கரம் விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி. ஜெயக்குமார் தலைமையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று(03) இடம்பெற்றது.

இந்  நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி) கலந்து கொண்டார்.

மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின்  வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை இதன் போது வெளிக்காட்டினர்.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணியினர் கிழக்கு மாகாண  மட்ட கரம் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான  தகுதி பெறவுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான களமாக இப்போட்டிகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் வீரர்கள் அயராது பயிற்சி செய்து மாகாண, தேசிய, சர்வதேச மட்டத்தில் விளையாட்டில் தமது திறைமைகளை வெளிக்காட்டி பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேசைப்பந்து போட்டிகளும் கல்லடியில் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *